இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக உள்ளுணர்வுகள் உரைத்துக் கொண்டே இருந்தன. பல உயிர்கள் துச்சமாக எண்ணிக் கொல்லப்ப்படுவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒரு துளி விந்துவினால் உயிர் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது கருவாகி உருவெடுத்து உலகத்தை வியந்து பார்க்கையில், தனக்கான உலக வாழ்க்கையில் ஊர்ந்து கிடக்கையில், சம மனிதர்களுடன் சிந்தையில் கலந்து உணர்வில் உறைந்து போய்க் கொண்டிருக்கையில் உயிரைப் புசித்து வாழும் வாழ்க்கை முறையானது எங்கிருந்துதான் முளைத்துக் கொண்டது? என் வெள்ளுடையாடையில் ஆங்காங்கே கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளின் உச்சத்தை சகித்து வாழ நான் உணர்வற்ற ஜடமாகியிருக்க வேண்டும். என் மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும். நானோ வாயடைத்து அல்லவா நின்றிருந்தேன். எங்கோ ஒரு மூலையில் மனித ஓலத்தை கட்டாயப்படுத்தியிருந்த ஜப்பான் சிப்பாய்களின் ஆயுதங்கள் முடக்கிவிடப்பட்டிருக்க வேண்டும். சதைகளை மிதித்து மிதித்து வலு சேர்த்துக் கொண்ட அந்த பூட்ஸ் காலணிகளின் ஓசைகள் என் செவிகளுக்கு அதிகமாக கேட்கின்றன. அவை ஆணவத்தின் அராஜமாக அல்ல, பயத்தில் தெரித்தோடும் வேகத்தின் தொனிகளாக. என் காதுகளைச் சதா கிழித்துக் கொண...
ஆழமான கருத்தைக் கொண்ட வரிகள். வாழ்த்துகள் மா.
பதிலளிநீக்கு