நூல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. வாசற்கதவோரம் மேசையென்பதால் வருவோர் போவோரெல்லாம் நூல்களை நோட்டமிடாமல் இல்லை. இலக்கிய நிகழ்வென்பதால் சுமாரான கூட்டம் வரும் என்கிற நம்பிக்கை இருந்தது. மாணவர்களும் பெற்றோர்களும் அரங்கினில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாணவர்கள் ஓரேயிடத்தில் அமராமல் அங்குமிங்குமாய் ஓடிக் கொண்டிருந்தனர். இசைக்குழுவினர் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். வாசற்கதவோரம் கடந்து செல்பவர்கள் நூல்களைக் கண்டும் காணாதவராய்ச் சென்றுக் கொண்டிருந்தனர். மாணவர்கள் அவ்வப்போது வாசற்கதவு வரை வருவதும் நூலின் அட்டைப் படத்தைத் தடவுவதும்,நூலைத் திறந்து பார்ப்பதுவுமாய் ,இருந்தனர். பெற்றோர்களை கையசைத்தால் எடுத்தப் நூலை அப்படியே மேசை மீது போட்டு விட்டு அரங்கத்தினுள் ஓடினர். நூலைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்கலாம் என முனையும் போதெல்லாம் சட்டென்று அரங்கினுள் ஓடி விடுகின்றனர். வழக்கம் போல நிகழ்ச்சி தாமதமாகத்தான் தொடங்கியது. நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னுமும் வருகையாளர் பட்டியல் ஓய்ந்தப்பாடில்லை. ஒரு மணி நேரத்தைக் கடந்து விட்ட நிலையிலும் ஒரு நூல் கூட விற்பனை...
ஆழமான கருத்தைக் கொண்ட வரிகள். வாழ்த்துகள் மா.
பதிலளிநீக்கு