குறுங்கதை : சிங்கப் பெண்ணே

அரங்கமே அமைதியில் சூழ்ந்த நிலையில் களமிறங்கிய மாணவிகள் அவர்தம் ஓடும் பாதையில் வேட்டைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். நானூறு மீட்டர்.
    கால்கள் ஓரிடத்தில் நிலைப்பெற முடியாத நிலையில் கைவிரல்களும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு நிலைக்குத்திக் கிடந்தன. வியர்வை துளிகள் முகத்திலிருந்து கழுத்திலறங்கி நெஞ்சுக்குழியில் நீரோட ஆரம்பித்ததும் சற்று நினைவு திரும்பியவனாய் விழியின் ஓரமாய் மாலினியைப் பார்த்தேன். 
    அவள் எந்தவொரு சலனமுமின்றி காணப்பட்டாள். நான் கவனித்தை உணர்ந்தவளாய் தன் காந்தப் பார்வையால் என்னை நோக்கினாள். அவள் கண்களையே பார்த்தேன். 
     "என்னங்க சார், நான் உங்க பொண்ணு. மனசுல படபடப்பு வேணாம். போய் ரீலேக்சா உட்காருங்க..."
     மாலினி உள்ளத்துணர்வுகளை விழியால் மீட்டுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. 
     சுங்கை தெப்பி தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த நாளன்று "வணக்கம் சார்" என்று லாரன்ஸ் மாஸ்டர் பாணியில் முதல் வணக்கத்திலே என் முதல் குழுந்தையுமானாள் மாலினி.
     நான் ஓய்வாகும் வேளையில் மாணவர்கள் திடலியிருந்தால் ஒவ்வொரு மாணவர்களின் நடவடிக்கைகள், கைகால்கள் அசைவுகள், விளையாட்டின்பாலுள்ள தீவிரம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிப்பேன். மாலினியிடம் மனதைரியம், விவேகம் நிறையவே இருந்தது.பெண் உசேன் போல்ட் அவள். கால்களில் அதிவேக மின்னல்.
     மூன்று வருட தவம். பயிற்றுவித்தவர்களுள் மாலினி மட்டுமே மாநில அளவிலான திடல்தட போட்டிக்குத் தேர்வானவள். எத்தனை பயிற்சிகள், போட்டிகள், அவமானங்கள், தடைகள்... 
     போட்டியின் தலைமையதிகாரி தன் பணியைச் செய்ய ஆயுத்தமானார். துப்பாக்கிச் சூட்டின் ஒலி கேட்டதும் என் மின்னல் வேக தாரகை நாடிநரம்பெல்லாம் புடைத்தெடுத்தோடினாள் வெறிப்பிடித்தவளாய்.
     கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவந்தவளை அரங்கமே கைத்தட்டி வரவேற்பைக்கண்டு என் கால்கள் துள்ளிக் குதித்து ஓடிச் சென்று இருக்கைகளாலும் மாலினியைப் தூக்கி என் நெஞ்சில் அணைத்துக் கொண்டேன், அவள் பருவமடைந்த கன்னிப்பெண் என்பதையும் மறந்து.
      மாலினி நானூறு மீட்டரில் முந்தைய நேரப்பதிவை முறியடித்திருப்பதும் சுக்மாவிற்கு தேர்வானதும் எல்லையற்ற மகிழ்ச்சி கண்களில் வழிந்தோடியது..

காந்தி முருகன்
கெடா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : விளைச்சல்

சிறுகதை : சகாப்தம்