கவிதை : அந்தரங்கம் விற்பனைக்கல்ல

 

 

வெற்றுக் காகிதத்தை

வெறுமனமே கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்

மழை வீழ்ச்சியின் சூட்சமம்

பிளந்து கிடந்த

பூமியின் வெப்பம்

தலைக்கேறிக் கொண்டிருக்கிறது

வியர்வைத் துளிகள் ஓயாமல்

மார்பின் வழியே

தேங்கிக் கிடக்கின்றன.

 

என் மௌனத்தின் அடர்த்தியை

களைத்துவிட்ட பதிகளுக்கு

கிழிக்கப்பட்ட என் உணர்வுகள்

தெருவில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கிற்கு ஒப்பற்றவையாகும்.

 

மரண வாக்குமூலம் தர

மறுக்கின்றன என் விரல்கள்

புத்துயிர் பெற்ற என் எழுத்தை

சிறைக்கைதியாக்க விருப்பமில்லை

புகழின் உச்சியில்

காதல் தந்த பலவீனம்

சூழ்ச்சியின் பலம்.

 

இந்த இரவோடு

இதை மறக்க வேண்டும்.

நாளைய விடியலில்

மீளமுடியாத கனவுகள்

வலுவிழக்கும்.

 

வஞ்சகனின் முடிவிலிருந்து

முடிவுறுவது கடினம்தான்

விரல்களின் இடுக்களிலிருந்து

என் தூவலின் கூர்மை

உலகை ஆளச் செய்யும்

எழுச்சியின் உற்சாக வார்த்தைகள்

என் செவிகளில்

ஒலித்துக் கோண்டே இருக்கும்.

 

ஆழ்ந்த குற்றவுணர்வை அவர்களுக்குள்

ஏற்படுத்த வேண்டும்

தயாரித்துக் கொண்டிருக்கிறேன்

பெண் எழுத்தாளர் வீட்டு

முகவரியில் பொரிக்கப்பட்டுவிட்டது

அந்தரங்கம் விற்பனைக்கல்ல “.

 

காந்தி முருகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்