குறுங்கதை : ஒரு நொடிக்குள்

இன்று எனக்குள் ஏற்பட்ட இந்த உணர்வு மனத்தை மிக பலவீனமாக்கி விட்டிருந்தது. சிவந்த நிறத்திலிருந்த உள்ளங்கைகளில் நடுக்கம் மிகுதியிருந்தது.
உள்ளங்கைகளில் படிந்திருந்த இரத்தக் கறையை துடைக்க முடியவில்லை. கைகள் இரண்டும் அந்தரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது போலவே இறுகிப் போயிருந்தது. கணம் பன்மடங்கு அதிகரித்திருந்தது. விரல்கள் விரித்துக் கொண்டிருந்தன. ஒரு விரலுக்கும் மற்றொரு விரலுக்கும் போதுமான இடைவெளிகள். விரல்கள் நடுக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கைகளின் தசைகளில் நடுக்கம் இருப்பதை உணர முடியவில்லை. தோள் பட்டை கைகளின் தசைகளை இறுக்கிக் கொண்டிருந்தன. தலை கிறுகிறுத்துப் போயிருந்தது. உச்சந்தலையிலிருந்து வியர்வைத் துளிகள் கழுத்து வரை நீரோட்டமாக இருந்தது.

சுற்றி கறுப்பர் கூட்டம். உருவங்களாக தென்பட்டன. கண்கள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. இருண்ட பாதையில் வாகனங்களின் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது. சம்மாங்காலிட்டு உட்கார்ந்திருந்ததில் கால்கள் மறுத்துப் போயிருந்தன. புதிய தார் ஊற்றி இரண்டே நாள்கள் ஆன பாதையிது. உடலில் ஏற்பட்டு சிலிர்வுக்கு ஒத்து போனது.. தூரத்தே நான்கு கால்கள் மட்டும் சற்று மங்கலாக ஓரக் கண்ணில் தெரிந்தது. அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த கால்கள். அதுவும் நடுக்கத்தில் இருந்தவை போல. கால்கள் ஓரிடத்திலிருந்து நிற்கவில்லை. முன்னுக்குப் பின்னுமாக நகர்ந்து கொண்டிருந்தன.

என் கன்னங்கள் காய்ந்து விட்டன. கண்களில் இனி கண்ணீர் வருமா என்று தெரியவில்லை. மடக்கி இருந்த அவரது கால்களை நேர்படுத்த துணிவில்லை. கண்கள் திறந்த நிலையில் என்னைத் தேடுவதாகவே உணர்ந்தேன். வெள்ளை நிறமாய் கண் முன் வந்து நின்ற திரையை நிமிர்ந்து பார்ப்பதற்குள் என் தோள் பட்டையில் கைக் கொடுத்து தூக்கினர். 

கணவரின் உடலைக் கடத்தும் போது மண்டை ஓட்டில் இருந்து பீய்ச்சிய இரத்தம் என்னை கதறியழச் செய்தது. நான் பார்த்த அந்த நான்கு கால்களும் ஒளிந்து கொண்டன. கூட்டம் நெருங்கி வந்தது. நெகிழியில் கடத்தப்பட்ட அவரது உடலுக்கு அருகில் நான் மௌனமாய் அமர்ந்திருக்க வண்டி சைரன் ஓசையில் நகர்ந்தது.

வெளியில் நின்றிருந்த குழந்தைகளின் கண்களில் நான் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்