குறுங்கதை : ம்ம்ம்...

“ அம்மா….சாப்டியா?....”

“ம்ம்ம்….”

“அம்மா…வீடு புடிச்சிருக்கா..?”

“ம்ம்ம்….”

“அம்மா….வெளில உள்ள கார்டன் செய்ய மட்டும் பதினைஞ்ஞாயிரம் வெள்ளி செவவாச்சு…”

“ம்ம்ம்….”

“யார் தொல்லையும் இல்ல…நாம நிம்மதியா வாழலாம்….”

“ம்ம்ம்….”

“டவுனை விட்டு முப்பது கிலோ மீட்டர் தள்ளி இருக்கோம்….ஒரு சத்தமில்லை….டிராபிக் ஜெம் இல்லை…அமைதியா இருக்கு….”

“ம்ம்ம்…”

“அம்மா…நீ ஏன் எஞ்சி வர….உட்காரு….அது ஓட்டோமேதிக் கேட்டு…நானே கதவை மூடிடுவேன்….”


“ம்ம்ம்…”

“மா…சும்மா தம்பி வீட்டுக்குப் போறன்ற…இவ்வளவு பெரிய வீட்டு யாரு பாக்குறது….அவனுக்கோ அஞ்சு பிள்ளைங்க….அந்த தாமான்ல வேற ஆளுங்க வந்து வந்து பேசிக்கிட்டு இருப்பாங்க….உனக்குத் தான் தொந்தரவு…சும்மா இங்க இரு…”

“ம்ம்ம்….”

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…

“ சகு….சகு…எங்கே போன?
சகுந்தலா….அம்மா படத்துக்கு பூமாலை வாங்கிட்டு வந்துருக்கேன்….”

“ம்ம்ம்….”

“சவுண்டுதான் வருது…ஆளக் காணம்…”

“டேய் மித்ரா…நீ எங்க போய்ட்ட”

“ம்ம்ம்…”

“ஏண்டா….எந்த நேரமும் ரூம்ல அடஞ்சியிருக்க….வெளில வாடா ….”

“ ம்ம்ம்….”

“ பேருக்குத் தான் பெரிய வீடு….சந்தோசம் இருக்கா? நிம்மதி இருக்கா….எப்ப பார்த்தாலும் தனிம தான்.‌.”

“ம்ம்ம்…..”

திடுக்கிட்டு நின்றேன். அம்மாவின் குரலது…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்