குறுங்கதை : வாசகனின் வருகை எழுத்து : கே.பாலமுருகன்

இக்குறுங்கதை வாசிப்பில் அனைத்து ரக மனிதர்களும் சகஜமான வாழ்க்கையைத் தான் வாழ விரும்புகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சாதாரண மனிதனின் வாழ்வியல் சூழல் பல தரவுகளில் சிதறிக் கிடக்கின்றன. எழுத்தாளன் என முத்திரைகுள்ளானவனின் அகநிலை ,புறநிலை யாவும் பல்வேறு கோணங்களில் பிளவுப்பட்டு இரு வெவ்வேறான சூழல்களில் பின்னிப்பினைக்கப்பட்டுள்ள‌ன. எழுத்தாளன் சாதாரன மனிதன் தான். தன் எழுத்துகளின் புனைவுக்கான காலக்கட்டங்களில் மட்டுமே தன் சிந்தனைக்கு அப்பாற்பட்ட உலகத்தில் நுழைந்து சாரசம்ஹாரங்களில் செயல்படுகிறான். ஓர் எழுத்தாளனின் படைப்புகளில் மீது எழும் பிரமிப்பு,பிரமாண்டம் எழுத்துகளை மட்டுமின்றி அவர்களையும் தனித்துப் பார்க்க தள்ளப்படுகிறது. சாதாரண மனிதனுக்கும் எழுத்தாளனுக்கும் அமையப்பெற்ற மூளை ஒன்றுதான். தேடல் எனும் நெடுந்தூரப்பயணத்தில் எழாத்தாளன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது போல சாதாரண மனிதன் விலகி நிற்கிறான். அங்கே ஏற்படக்கூடிய அந்த இடைவெளி தனித்துவம் பெற்று விடுகிறது. தனிமனிதனின் தனித்துவமான பார்வை,அலசல் எழுத்தாளன் மீது ஏற்படுத்தும் தூண்டுதல் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும்,சுதந்திரத்தையும் சில நேரங்களில் பாதிக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

இக்குறுங்கதையில் எழுத்தாளர் அதிகம் பேச மாட்டார்,வாசகரை வீட்டில் அனுமதிக்க மாட்டார் ; விரட்டியடிப்பார் என்பதெல்லாம் எழுத்தாளனுக்குள்ள தனிப்பட்ட குணங்கள் அல்ல. மாறாக, தனிமனித சுதந்திரப் பாதிப்பில் எழக்கூடிய எதிர்வினைகளாகும்.

பிரமிப்பை ஏற்படுத்தும் எழுத்தாளன் சுதந்திரமாக நடமாடுவதற்கில்லை. அவன் ஏற்படுத்தும் எழுத்தின் பிரமிப்பில் ஆழ்ந்து விடும் வாசகனின் அன்புத் 'தொல்லைகளால்' சிக்கி விடுவதுண்டு.

தனிமனித சுதந்திர பாதிப்பென்பது மூளையை ,சிந்தனையை பலவீனப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளரின் மனைவியின் போக்கில் உணர்த்தப்படும் உண்மை இதுவாக இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்