வாசகப் பார்வை சிறுகதை : அனல் ‌‌ எழுத்து கே பாலமுருகன்


'அனல்' சிறுகதை வாசிப்பில் முற்றிலும் புதியதொரு அனுபவத்தைக் கொடுத்துள்ளது.வாசிப்பில் விறுவிறுப்பை உண்டாக்கி முடிவை நோக்கி விரைந்து செல்ல வைக்கிறது.வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் தேடலை விசாலமாக்கியுள்ளது.தலைப்பிற்கேற்றவாறு அனல் தெறிக்கிறது.அனல் என்பதற்கு வெப்பம்,சூடு என்று பொருள்பட்டிருக்கலாம்.ஆனால்,ஒரு மனிதனின் குணாதிசியங்களுக்குள் ஊர்ந்து நிற்கும் கொடுங்கோலும் அச்சாரத்தைக் கொண்டிருப்பதை இக்கதை உணர்த்தி நிற்கிக்கிறது.

எந்த ஒரு உயிரும் தீங்கிற்கு உட்பட்டவை அல்ல. காலத்தாலும்,கடந்து வரும் சோதனைகளாலும் ஆளுமையை இழக்கும் தன்மைகளாலும் தான் வித்தியாசப்பட்டு விவகாரமாக்கப்பட்டு மனிதம் எனும் கோட்டிலிருந்து விலகிச் செல்கின்றன. சாந்தியின் கதாபாத்திரம் புனைவுக்காக மிகைப்படுத்தப்படவில்லை‌ என்பதில் வாசகனுக்குத் தெளிவு நிகழ வேண்டும்.உருவத்தில் பெண்ணாகவும், தன்மையில் அசூர வேகம் கொண்டவளாகவும் மூர்க்கத்தனத்துடன் நடமாடும் சாந்திகளும் இருக்கவே செய்கின்றனர். யாரும் தீயவனாக பிறப்பதில்லை.சாந்தியின் பாத்திரப் படைப்பை இவ்வளவு மூர்க்கத்தனமாக காட்ட வேண்டிய சூழல் இக்கதையில் உள்ளது.உதவாக்கரை சேகரின் மனைவியாக அவள் வாழ்ந்திருக்கக் கூடிய சூழல்களால் அவள்
மாறுப்பட்டிருக்கலாம்.வாழ்வின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டவர்களின் அடுக்குகலிலிருந்து பார்த்தோமானால் சாந்தியின் கதாபாத்திரத்தின் வாய்ப்புத் தன்மை விளங்கும்.சாந்திக்கு எதிரான முரணாக சுமதியின் பாத்திர வார்ப்பு.கதையின் துவக்கத்தில் சித்தரிக்கப்படும் இயல்பான சுபாவத்தைக் கொண்டிருக்கும் சுமதி சாந்தியின் சாடல்களினால் இயல்பிலிருந்து விலகி ஆக்ரோசமாகிறாள்.இதுவே மனித உளவியல் சாரம்.காலமும் சூழ்நிலைகளும் எத்தகைய அனுமானங்களிலும் இருந்து விலகிடச் செய்யும் காரணிகள். 

நடமாடும் கதாபாத்திரமாக சேகர் உருவாக்க ப்படுத்தப்படாவிட்டாலும் இரு பெண்களின் உளவியல் சிக்கல்களுக்கு ஊர்ஜீனமாகிறான்.இதை புனைவியலின் அழகியலாக உணர்கிறேன்.உயிர்ப்பெறும் கதாபாத்திரம் மட்டும் பேசப்படுவதி ல்லை.சேகரைப் போன்று அந்நியமான கதாபாத்திரமும் கதைகளில் உயிரோட்டமாகின்றன.

கதையில் பல இடங்களில் நாம் பார்க்க கூடிய வாழ்வின் மீதான சிறுசிறு விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு எழுதியிருப்பது எழுத்தாளனின் நுண்பார்வையை வழியுறுத்தி நிற்கிறது. கண்களில் படும் பல விடயங்களை எந்தவொரு சலனமுமின்றி எளிதாக கடந்து விடுகிறோம் . அது போன்ற விடயங்களை இக்கதை கூர்ந்து உணர வைக்கிறது.
மவுண்டன் சைக்கிளைக் கொண்டு சாந்தியின் உடல் வலிமையை உணர்த்துவதும்,கோழிகள் சுதந்திரமாக திரிந்து அகப்படாமல் திரிவதில் சேகரின் குணத்தையும்,சுமதியின் வறுமையை காட்சிப்படுத்திய விதத்திலும்,குழந்தையின் நப்கினில் குடும்ப சூழல்களின் வறுவாயையும் இக்கதை உணர்த்தி,உரைத்தி நிற்கிறது.கதைக்கு வார்த்தைகளின் விளையாட்டை விட காட்சிகளில் வகைப்படுத்தலே சிறப்பு.

 இறுதியில் சாந்தியை மேலெழுப்பிக் காட்டிய விதத்தில் இக்கதை வென்று நிற்கிறது.குழந்தமை கதாபாத்திரம் இக்கதையில் கையாளப்பட்ட விதம் சிறப்பு.எல்லா மனித மனங்களும் குழந்தைத்தனம் மிக்கவை‌ என்பதை நினைவுறுத்துகிறது.கொடுங்கோல் குணமும் களைந்து அழிந்து போக ஒரு குழந்தையின் புன்னகை,மொழியற்ற பேச்சு,தட்டுத்தடுமாறும் கால்கள்,காந்தியைப் போன்ற பெண்ணைப் பார்த்தும் நகைக்கும் தன்மை போதும்.புயலெனவானவள் தென்றலாகிப் போகிறாள்.

அனல்...பார்வையில் அல்ல,உடலில் அல்ல...வேண்டாத குணங்களையெல்லாம் இழுத்துக் கட்டிக் கொள்ளும் நம் மனத்தில் உள்ளது.அதை மற்றவர் மீது திணிக்கும் நம் பயனற்ற‌ மாண்புகளாகிறது.


https://solvanam.com/2022/02/27/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d/


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்