விமர்சன பார்வை : குறுங்கதை :பதில்களின் மௌனம் எழுத்து : கே.பாலமுருகன்


இக்குறுங்கதை வாசிப்பில் எழுத்தாளனின் அகநிலை,புறநிலைகளை பல்வேறு கோணங்களில் சிந்தனைகள் சிதறின.எழுத்தாளன் என்பவன் யார்?நம்மைப் போன்ற சராசரி மனிதன்.அந்த சராசரி மனிதன் மீது நமக்கு ஏற்படும் பிரமிப்பு,தூண்டுதல் உணர்வு அவன் தரும் படைப்புகளால் உருவாகிறது.எழுத்தாளுமையின் மீது ஏற்படும் பிடிமானம்,உந்துதல் அவர்களை சக மனிதர்களோடு இருந்து தனித்துப் பார்க்க வைக்கிறது.

ஆனால்,எழுத்தாளனுக்கு அப்படியல்ல.எழுத்தாளன் எழுதும் கணங்களில் மட்டுமே ஞானத்தின் உலகில் இருக்க முடியும் என நம்புகின்றனர் ஜாம்பவான்கள்.படைப்பிலக்கியத்தை உருவாக்கும் நேரங்களில் ஒரு சராசரி மனிதனாக தனித்து நிற்கிறார்கள்.அந்நேரத்தில் அவர்களுக்குள் எழும் ஆவேசம்,அமைதியின்மை,உணர்ச்சி மிகுந்து போகுதல் யாவும் சராசரி மனிதனின் உச்சத்தை விட பன்மடங்கு மிகுந்து காணப்படுகிறது.தங்களுக்குள் தனி உலகத்தை உருவாக்கி புனைவுகளில் சிந்தனைகளைச் செதுக்கி உச்ச வெளிப்பாட்டினை வழங்கி நிற்கின்றனர்.படைப்பிலக்கிய நிலையில் மட்டுமே தனது நிலைப்பாட்டில் ஆக்கப்பூர்வமான சவாலை எதிர்கொள்கிறார்.படைப்பிலக்கியத்தை தனித்து நிற்கும் கணங்களில் மூளைக் கசக்குவதில்லை;இயல்பாக வாழ்கின்றனர்.

ஆனால்,எழுத்தாளுமைகளின் மீது ஏற்படும் மோகம் நம்மை பிரம்மாண்டத்திற்குள்ளே வட்டமிட வைக்கிறது.கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் எழுத்தாளரைக் கண்டு வியந்து போகிறான்.

"சிறந்த எழுத்து உருவாவதற்கு நாம் என்ன செய்யனும் சார்" எழுத்தாளர் பதில் சொல்லாமல் மகேன் புரிந்து கொண்டது என்னவோ! பிரபஞ்சத்தின் புதிர்களில் உறைந்திடும் மௌனங்களில் நம் ஆழமான புரிதலை,ஈடுப்பாட்டை ஒன்றினைத்து மௌனமாய் கடந்து விட்டால் சகல விதமான தாகங்களும் தீர்ந்து போகும்.

பதில்களில் மௌனம்,குறுங்கதைக்கான இணைப்பு  

http://balamurugan.org/2022/02/05/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்