விமர்சன பார்வை குறுங்கதை : ஒற்றைப்பந்து எழுத்து : கே.பாலமுருகன்

மாணவர்களது உளவியலை உள்வாங்கிய கதைக்களம்.சமகாலத்து வாழ்க்கைச் சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மாணவர்களது மனநிலைதான்.விசாலமான திடலும்,போதிய விளையாட்டு உபகரணங்கள் ஒரு மாணவனது எதிர்ப்பார்ப்பை,ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதில்லை.அவையாவும் வெளித்தோற்றத்தில் நிகழக் கூடிய மாயத்திரைகள்தான்.
குழந்தைப் பருவத்தில் ஒரு விடயத்தில் தடைகளை உருவாக்குவது இயற்கையானாலும்,மனிதனாலும் அது குழந்தைகளுக்கான தண்டனையாக மாற்றியமைத்துக் கொள்வது குழந்தைகளின் உளவியல் கூறாகும்.ஒற்றைப்பந்தில் நிகழ்வதும் இதுதான்.வீட்டிற்கு முன் திடலிருந்தும் தம்பியைப் பார்த்துக் கொள்ள ஏற்படும் தடையானது அது வினோத்திற்குள் வெறுப்புணர்ச்சியை வளர்க்கும்.இருந்தாலும் வினோத்திற்கு பள்ளியில் விளையாட மற்றொரு வாய்ப்பு உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அதை பயன்படுத்த நினைக்கிறான்.குழந்தைகளின் உளவியல்படி சுலபமாக கிடைக்கக் கூடிய பிரச்சனைகளின் மீதான மாற்றுவழிகளின் மீது எதிர்பார்ப்புகள் விரியும்.பள்ளியிலும் வினோத் விளையாட நிலை வரும்போது அங்கு அவன் கைகளால் ஏந்திப் பிடிக்கும் அந்த தருணத்திற்காக தான் அவன் காத்திருந்தான்.எதிர்பார்ப்பு என்பது தேவைகள் பூர்த்தியாவதில் இல்லை.அதைத் தழுவி,தடவிப் செல்லும் அரிய வினாடிகளில் தான் உள்ளது.இதை உணர்த்தும் இக்குறுந்தை பாராட்டுக்குரியது.

http://balamurugan.org/2022/02/11/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-27-%e0%ae%92%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்