விமர்சன பார்வை : குறுங்கதை :மீட்பு எழுத்து : கே.பாலமுருகன்


"மீட்பு" குறுங்கதையை வாசித்தப் போது பெண்ணியம் என்பது எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற கேள்விதான் எழுந்தது.கடந்த சில ஆண்டுகளாக தாய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் பற்பல சம்பவங்கள் நடந்துதான் வருகின்றன.
ஓர் ஆய்வில் அமெரிக்காவில் நான்கில் ஒரு தாய்க்குக் குழந்தையைக் கொன்று விட எண்ணங்கள் உருவாகுவதாக அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்துகின்றன.இதற்கெல்லாம் என்னதான் காரணம்?கலா தன் குழந்தையைக் கொல்ல முனையும் அளவிற்கு அவளுக்குள் தாய்மை உணர்வு கூட வேண்டாம் மனிதாபிமானம் எங்கே போனது?
அறிவியல்பூர்வமான ஆய்வில் உளவியல் சிக்கல் தான் காரணியாகச் சொல்லப்படுகிறது.மகனின் கழுத்தில் கை வைத்து திருகிட எப்படி மனம் வந்தது?

மாறி வரும் கால நிலைகளில் பெருகி வரும் மருட்சி கோளாறு ( உளவியல் ரீதியில் தீவிரமான மனநோய்) என மருத்துவர்கள் பல தெரிவித்துள்ளனர்.கலாவிற்குக் கணவன் மீது ஏற்படும் வக்கரமான நிலை,மாரிமுத்து மீது ஏற்படும் ஒழுங்கற்ற சிந்தனை செயல்முறை அவளுக்குள் ஏற்படுத்தியிருக்கின்றன மனக்குழப்பங்கள் பெண்ணியத்தைக் காணாமல் போகச் செய்கிறது.

"சுப்ரமணியத்தின் மீதான வக்ரத்தை மனத்தில் ஓடவிட்டு வெறுப்படைகிறாள் கலா"....பெரும்பாலான மனநிலை பாதிப்புக்குத் திரும்ப திரும்ப நடந்த விடயங்களை உள்வாங்கி சிலாகிக்கும் தன்மையும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.அப்போதய மனத்தின் தீண்டாத எண்ணங்களை அன்றே மனத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்கிறது மனோவியல் தத்துவம்.ஆனால், பெரும்பாலானோர் இதைச் செய்வதில்லை என்பதே உண்மை.

மரபணு,உயிரியல்,உளவியல் போன்ற காரணங்கள் பரவலாகப் பேசப்படுபவை.மனிதம் மனிதத்தன்மையை விட்டு விலகி வருகிறது.

கலாவின் உளவியல் தாக்குதல்களுக்கு பல காரணிகள் அமைந்தாலும் பெண்ணியம், மனிதாபிமானம்,அன்பு என்னவானது என்பது சந்திக்க வைக்கிறது.வசந்தன் தப்பித்தார்;ஆனால்,எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்