விமர்சன பார்வை குறுங்கதை : காலன் எழுத்து : கே.பாலமுருகன்

மரணத்தின் விளிம்பில் மனிதனின் நிலையை உணர்த்திய குறுங்கதை.மரணம் என்பது எண்ணப்பட்ட காலம்.இறப்பு அத்தகைய எளிமையான ஒன்றுமல்ல.வாழ்நாள் கடத்தல் விட மரணத்தைக் கடந்திடும் நிமிடங்கள் கொடுமையானவை.ஆனால்,எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள் ஏற்படுவதில்லையென்பது உண்மை.உடலியல் மாற்றங்கள் பலவிதங்களில் மரணத்தின் விளிம்பை உண்டாக்குகின்றன.வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்ந்து எதார்த்தமாக வாழக் கூடியவர்கள், பண்பட்ட உணர்வாளர்கள் மரணத்தை ஏற்றுக் கொண்டு அதனுடன் போராடுவதில்லை.

முணியாண்டி தாத்தா தான் கட்டிய வீட்டில் வாழவில்லை.அதுவே வாழ்வின் மீதான ஏக்கத்தின் வெளிப்பாடு.முணியாண்டிக்குள் ஏற்படும் பயவுணர்வு மரணத்தை நெருங்கிட இலகுவாக்குவதில்லை‌.மேலும்,அருகிலிருப்பர்களின் 'கழிவிரக்கம்' பயத்தை அதிகரிக்கவே செய்யும்.எதார்த்தமான நிலையிலிருந்து விலகி மரண வாசலிலிருக்கும் மனிதனை மற்றவர் ஒரு சேர பார்க்கும் போது அது இறுக்கமான சூழ்நிலையைத்தான் உருவாக்கும்.இது தவிர்க்க முடியாத சூழ்நிலையும் கூட.

மரணத்தை எதிர்கொள்ள விரும்பாதவன்தான் உடல் சிலிர்த்து,குரல் புலம்பி போகிறான்.முணியாண்டியின் கண்களில் தேங்கும் நீர் அறிவியல் தகவல்படி மூளைக்கு ஆக்ஸிஜன் குறைப்பாட்டினாலும்,சுவாசத்திற்கு ஏற்படும் தடைநிறுத்ததாலும் உண்டாகிறது.மரணம் நிகழும் போது கண்ணீராய் வழிகிறது.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் மனிதரைச் சுற்றி முடிந்தளவு
பயவுணர்வான பிம்பத்தை உருவாக்காமலிருப்பது சிறப்பு.ஆனால்,நம்மோடு வாழ்ந்து விட்ட ஓர் உறவை இழக்கும் தருவாயில் எல்லா மனித மனங்களும் வலுவிழந்து,ஆற்றல இழந்து சுருங்கிக் கொள்கின்றன என்பதையும் மறுத்திடயிலாது.எல்லா மனங்களும் மரணத்தின் அருகில் தவழும் குழந்தையே.

http://balamurugan.org/


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்