விமர்சன பார்வை : குறுங்கதை : வரிசையில் ஒருவன் எழுத்து : கே.பாலமுருகன்


"முதுமையின் முடிவை நோக்கி விரைந்திடும் ஒரு களம்" தான் வரிசையில் ஒருவன் என்று உணர வைக்கிறது.உளவியல் சார்ந்த கதைக்களமாக அமைந்துள்ளது‌.

முதுமை மரணத்தின் சாயலில் தான் பலருக்கும் விரைந்து கொண்டிருக்கிறது.உயிரியல் வயது வாழ்க்கைக்குத் தடையென்பதல்ல.கதையின் தொடக்கத்தில் இதை ராமசாமி நன்குணர்ந்தவராய்ச் சித்தரிக்கப்படுகிறார்.காலச்சக்கரத்தில் தான் நகர்த்திட தன் அகநிலை தயாரான நிலையில் இருப்பதாக வர்ணிக்கப்படுகிறார்.ஆனால்,அவருக்குள் முதுமையின் தடுமாற்றத்தைக் காட்டி குறைவான மீளுருவாக்கம் திறன்கள் தான் முதுமையில் சுற்றியிருக்கும் சூழல்களால் நம்மை அச்சவுணர்வுக்குள் தள்ளிவிடும் என்பதை கதையின் முடிவாக பார்க்க வைக்கிறது.திடகாத்திரமான மனிதராக வலம் வரும் ராமசாமி காலத்தின் நேர்க்கோட்டில் பயணிக்க தடுமாறுவது உடலியல், உயிரியல் மாற்றங்கள் மட்டுமல்ல,சூழலியல் மாற்றங்களும் அதன் தாக்கங்களும் அதில் அடங்கும்.

நாமும் ஒரு நாள் வரிசையில் ஒருவன்....
எம்மாதிரியான அகநிலையில்,புறநிலையில் வாழப்போகிறோம் என்பதை காலம் நிர்ணயிக்கும்.

குறுங்கதையை வாசித்திட இணைப்பு இதோ :
http://balamurugan.org/2022/01/29/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்