விமர்சன பார்வை : குறுங்கதை : எழுத்தாளனின் கதை 2 ‌‌எழுத்து : கே.பாலமுருகன்


இலக்கியம் எப்போதும் ஒரே விதமான புனைவு வகையை மட்டும் சார்ந்திருப்பதில்லை‌.பல்வகை புனைவுகளுக்கிடையிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான புனைவுகள் சார்ந்து சிறுகதைகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. 'எழுத்தாளனின் கதை 2' வாசிப்பில் சற்று மாறுபட்டு நம்மை மற்றுமொரு தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

'கனவுருப்புனைவு' இலக்கியத்தின் ஓர் அழகியல் பாணி.மிகுபுனைவு.அமானுடம்,மாய வித்தைகள் என வாசகனைத் தன் பக்கம் இழுத்திடும் இலக்கிய உத்தி கனவுருப்புனைவு.இலக்கியத்தில் இப்பாணி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று 20 நூற்றாண்டில் இலக்கியத்தில் மைய நீரோட்டமாக இருந்து வருகிறது.

ஒரு நாவலின் இறுதி அத்தியாயத்திற்காகப் போராடும் எழுத்தாளர்.எழுத்தாளன் ஒரு புனைவுக்குள் நுழைந்து விட்டால் அவனது உலகம் தனிதான்.தான் ஒரு கதாபாத்திரங்களோடு ஒன்றிணைந்து தனக்கான இலக்கிய சூழலில் ஐக்கியமாகி விடுகிறான். இக்குறுங்கதையின் எழுத்தாளர் வாங்கி வரும் உணவுகள் கெட்டுப் போகும் வரையிலும் தன்னிலை மறந்து செயல்படுகிறார்.யாரையும் சந்திக்கவும் அவர் விரும்புவதில்லை.இது வெறுப்பற்ற நிலையல்ல.எழுத்தாளனின் உள்ளார்ந்த அகநிலை.இன்பதுன்ப சலனங்களுக்கு அப்பாலுள்ள பெருவெளி அகநிலை.தன்னால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை உயிர்த்தெழுவும்,மரணிக்க செய்யவும் எழுத்தாளனுக்கு உரிமையாகப்பட்டாலும் அதை எளிதில் செய்திட எழுத்தாளனால் இயலாது.எழுத்திற்குத் தான் அவை கதாபாத்திரங்கள்.எழுத்தாளனுக்கு அவை உயிரோட்டமிக்கவை.எழுத்தாளன் கதாபாத்திரங்களாக வாழ்ந்து வருகிறான் என்பது நிதர்சனம்.கதைகளால்ll எழுத்தாளன் எவ்வாறெல்லாம் பிளவுப்படுகிறான் எனும் உளவியல் உண்மையை இங்கு உணர முடிகிறது‌.

குறுங்கதையின் இணைப்பு
http://balamurugan.org/2022/01/28/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-2/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்