விமர்சன பார்வை : குறுங்கதை : 101 இரவுகள் எழுத்து : கே.பாலமுருகன்


101 இரவுகளில் முதல் பயணம் ஓர் ஆழமான உளவியலைச் சார்ந்திருப்பதாக உணர முடிந்தது.மறுவாசிப்பில் மேலும் பல தகவல்களை உணர முடிந்தது.

 அவள் வெளிச்சத்தை வெறுக்கிறாள்.ஒருவராவது தன்னைப் புரிந்து கொள்ள மாட்டார்களா என ஏங்குகிறாள்.இது அவளுக்குள் கிடக்கும் உளவியல் சிக்கல்களை வெளிப்படுத்தி நிற்கிறது.அவனது வருகை அவளுக்குள்ளிருக்கும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக அமையவில்லை.அவன் வழி அவள் உணரும் கற்பனை வாழ்க்கை தான் அவளது மகிழ்ச்சி.

ஆலிஸ் இன் வொண்டர்லேண்....இருண்ட கற்பனைக்குள் நம்மை அழைத்துச் செல்லும் நாவலாகும்;திரைப்படமாகும்.விந்தையான உலகில் மூழ்கச் செய்யும் விந்தையான உயிரினங்கள் நிறைந்த கற்பனை வாழ்க்கையாகும்.ஆலிஸ் கதாபாத்திரம் நீலநிற இடுப்புச் சட்டை அணிந்து கடிகாரம் ஏந்திய முயலோடு மாய உலகில் நுழைகிறாள்.அங்கு வாழ்ந்து அவர்களோடு இணைந்து விடுகிறாள்.பிரமைகள் நிகழ்ந்த உலகில் இல்லாத விடயங்களைக் காட்சிப் படுத்தப்படுவது இயல்பு.அவனது உயிரோட்டமில்லாத இறுதி வாசிப்பில் அவள் மனமுடைகிறாள்.கற்பனைக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவளுக்கு அவன் இல்லாத பொழுது நரகமாகிறது.

கனவுக்குள்,கற்பனைக்குள் தொலைந்து போகும் ஒரு வித உணர்வு ஆழ் மன பாதிப்புகள்தான்.மாயத்தோற்றங்கள் முழுமையாக ஆட்கொள்ளும் நிலை.இதனால் ஆபத்தில்லையென்றாலும் தவறான எண்ணங்களினால் கூட ஆளப்படலாம் என்கிற நிலை உண்டு.அவன் இல்லாத போதும் மாய பூனை எனும் கற்பனை அவளோடு வாழ்கிறது.மனம் விரும்பிய விடயங்களில் தான் மனம் ஒன்றினைந்து போகும்.இது ஆழமான உளவியல் பாதிப்பாக கருதலாம்.தன்னிலை மறந்து எப்போதும் இரவு வேளைக்காக,அந்த மாய உணர்விற்காக,பிரம்மைக்காக மனம் தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அவனது மரணம் அறியாதவரை அவள் எல்லா இரவுகளிலும் இருண்ட கற்பனைக்குள் வாழ்ந்திருப்பாள்.

இணைப்பு :

http://balamurugan.org/2022/02/04/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-101-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்