விமர்சன பார்வை : குறுங்கதை : அதான் எழுத்து : கே பாலமுருகன்


' அதான் ' 
பெருநகர் வாழ்வின் விசாலத்தையும்,அதன் பெரும் சிக்கல்களையும்,அதனால் சுறுங்கி விட்ட மனித மனங்களையும் மிக குறுகிய சொல்லாடல்களால் உணர்த்த முடியும்மாயின் ஒரே சொல் 'அதான்'.தோட்டப்பற வாழ்க்கை முறையில் 'அதான்' என்கிற வார்த்தைதான் ஒரு உரையாடலைத் தொடக்கி வைத்தது.ஒரு நிமிடத்திற்குள் நால்வரையாவது ஒரு விடயம் சென்று சேர்ந்து விடும்‌.காலத்தின் வளர்ச்சி,மனித மனத்தின் துரிதம்,நவீனம் என்கிற போர்வை அவரவர் மனங்களின் வெளிப்படுகளைத் தடுத்து நிறுத்தி மற்றவர்களுக்கு ஒத்துழைப்பது போல வசைப்பாடி எல்லா நகர்வுகளிலிருந்தும் தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறான் மனிதன்.இதை நாகரீகம் எனவும் பெயரிட்டுக் கொள்கின்றனர்.முருகேசன் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை யாரும் கண்டுப்பிடிக்கவில்லை என எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.மனிதர்களுடன் உரையாடலை நீடிக்க விரும்பாதவன் என்கிற தோரணை முருகேசனுக்குள் நிலவுகிறது.மனிதனின் நோக்குநிலை உறவுகளுக்கிடையே விரிய மறுக்கிறது.முருகேசனைப் 'பொணம் போறான் பாரு' என் பேசுபவர்கள் அவனுக்குள் நீடிக்கும் மௌனத்தைக் கலைக்க முனையவில்லை.கதைச்சொல்லி முருகேசனிடம் அதான் என்றபோது அவன் பேசுபவனைக் கூர்மையுடன் கவனிக்கிறான்.ஆக, முருகேசன் தனித்து வாழவில்லை‌.தன்னைச் சுற்றிக் கூர்ந்து தான் கவனித்து வாழ்கிறான்.ஆனால்,பெருநகர் வளர்ச்சி தான் உண்டு தன் வேலை உண்டு என்கிற நிலைக்கே அனைவரையும் தள்ளுகிறது.

குறுங்கதையின் இணைப்பு
http://balamurugan.org/2022/01/27/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்