விமர்சன பார்வை : குறுங்கதை : குமாரி உணவகம். எழுத்து : கே பாலமுருகன்


சாமானிய மக்களின் வியாபார சிந்தனையை "குமாரி உணவகத்தில்" வாசித்த போது இச்சமுதாயத்தின் மீது சில கோபதாங்கள் உண்டானது.சிறிய நடுத்தர வர்க்கத்தின் வியாபார நிலை எப்போதும் சிறப்பான நிலையில் இருக்கும் என்பதல்ல.தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் குமாரி "உணவகம்" என குறிப்பிட்டிருப்பது தன்னம்பிக்கையின் அடையாளமாக பார்க்க வைக்கிறது.சுயதொழிலின் முதல் வெற்றியே நமக்குள் விளையும் தன்னம்பிக்கை.தினமும் தன் உணவு வகைகளை கைப்பேசியில் மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது நல்ல வியாபார உத்தியாக அமைகிறது.திரும்ப திரும்ப ஒரு விடயத்தைக் காணும் போது மனத்தில் மாற்றங்கள் உண்டாவது உளவியலின் ஒரு அம்சமாகும்.ஆனால்,இங்கு கதைச்சொல்லி "தோசையெல்லாம் ஒரு மெனுவா? என நொந்து கொள்வேன்" என எழுப்பிய கேள்விதான் சமுதாயத்தின் மீது தீராத வெறுப்புணர்ச்சியாகிறது.இப்போதெல்லாம் 'நாசி லெமாக்','வான் தான் மீ' போன்ற உணவுகளின் மீது ஏற்படும் மோகம் நம் பாரம்பரிய உணவுகளின் மீது நாட்டத்தைக் குறைத்து விடுகிறது.காலப்போக்கில் நம் பாரம்பரிய உணவுகள் மாற்றானுக்குத் தாரை வார்த்து விட்டு உரிமைப் போராட்டத்தைத் தொடங்கி விடுகிறோம்.வழிய வந்து உரிமையை காற்றில் பறக்க விட்டு பிறகு ஏன் திரும்பவும் பெற போராட்ட முனைவு?

இன்னுமும் மாற்றான் உணவகத்தில் ஒரு தள்ளுவண்டியில் நம் சமுதாய வியாபாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அது எப்போது மாறும்?மாற்றான் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு மாறுதலுக்காக நம் உணவு வகைகளை உட்கொள்ளும் நிலையை உருவாக்குகிறோமே தவிர நம் பாரம்பரிய உணவுகளைத் தேடி வந்து உண்ணவில்லை.இது நம் உணவு வகைகளுக்கும் கிடைக்கப் பெறும் அங்கீகாரமாகத் தெரியவில்லை.அடுத்தவர் ஆதிக்கத்தில் நம் முன்னேற்றத்தை அளவிட்டு நகர்த்திக் கொண்டிருக்கிறோம்."குமாரி உணவகம்" நட்பின் அடையாளமாக உணவருந்தும் இடமாக பார்க்கத் தோன்றவில்லை.நம் சமுதாயத்தின் வியாபார நிலையை எடுத்துரைத்த களமாக எனது பார்வையில் அமைகிறது.

குறுங்கதையின் இணைப்பு
http://balamurugan.org/2022/01/26/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்