விமர்சன பார்வை : தலைப்பு கே பாலமுருகன்





இக்குறுங்கதை, வாசிப்பில் மனம் குற்றவுணர்ச்சியால் சிதையுண்ட நிலைக்குத் தள்ளப்பட்டது.ஒரு வட்டத்திற்கான வளைவில் ஒருவரது கோணல் நிலை மற்றவரையும் பாதிக்கும் என்பது நிதர்சனம்.பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினை மோசமான விளைவுகளைத் தான் கொண்டு வருகிறது.விக்கியின் கல்வியின் பாதிப்பில் ஒருவரை ஒருவர் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப் படுத்திக் கொண்டு அடுத்தவரை கைக்காட்டி நிற்கிறார்கள்‌.அங்கு எழுந்திருக்கக் கூடிய சிக்கல்களுக்கு யார் பொறுப்பாளி?மாணவனது சிக்கல் அவனிடத்தில் தொடங்கி வெவ்வேறான மனிதர்களிடம் பயணித்து மீண்டும் அவனிடமே வந்து நிற்கிறது.அதன் பாதகமாக அவன் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு எதிர்வினை படலம் தொடங்குகிறது.கல்வியில் பின் தங்கிய நிலையில் ஒருவன் 'பழி' எனும் தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது அது இச்சமூகத்தின் சாக்கடையாகத்தான் உருமாறி நிற்கிறது.விக்கியின் உளவியல் சிக்கல்களைக் களைவதற்கு யார் பொறுப்பாளி என்கிற கேள்வித்தான் எழுகிறது.பொறுப்புமிகுந்த பார்வையால் தான் சிக்கல்களுக்கான தீர்வை அறிந்திட முடியும்;களைந்திட இயலும்.தொடக்கத்திலிருந்து தீர்வு காணப்படாத சிக்கலால் விக்கியிடமும் முயற்சியின்மை காணாமல் போகிறது.

யார் யாரையும் குற்றஞ்சாட்டி நிற்க வேண்டிய அவசியமில்லை.ஒரு வளையமாக தொடர் பயணத்தில் ஒருவரைச் சார்ந்து ஒருவர் வலம் வரும்போது எங்கு சிக்கல்கள் உண்டானாலும் அது அனைவரது பொறுப்பாகி விரைவில் களையப்பட்டு உளவியல் பாதகங்களைத் தவிர்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்