கவிதை : மனிதமும் மனிதாபிமானமும்

உணர்வுக்குள் செலுத்தி
அதை வெளிக் கொணர்வோருக்கு
தகுந்த சன்மானம் என
மனிதாபிமானம் தேர்வானது.

நா வறண்டு மக்கள் கூட்டம்
அலைக்கழித்து வெள்ளுடை தேவதைகள்
முடச்சில் தீர்ந்தது
இடமும் காலியானது.

காத்திருந்த நாளில்
சாலையில் மயங்கி விழந்தவனை
தொற்றென விலகிட்ட நிலையில்
கண்டுக் கொள்வார் எவருமில்லை.

உதவிக்கரம் நீட்டி
இலவசமான விளம்பரத்தில்
வலது கை அளிப்பதை
இடது கை செல்பி ஆக்கியதில்
பெருகி வழிந்தன
முகநூல் கணக்குகள்.

'வீட்டிலேயே இருங்கள்'
வாசகப் உயிரற்று
கறுப்புக் முடிகின்றது
இந்த மனிதாபிமானத்தை மறந்து
உலகம் வெளியில் என்ன தேடுகின்றது?
எவர் வெல்வாரோ?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

சிறுகதை : சதுரங்கம்