குறுங்கதை : அழகு

கற்பக்கரகத்தில் வீற்றிருந்த துர்க்கையம்மன் அழகாய்க் காட்சியளித்தாள்.பதினாறு கைகளுடன் சிவப்பு நிற கண்டாங்கிச் சேலையில் நிசத்தில் நின்றிருப்பது போலிருந்தது.கருஞ்சிலையானாலும்பவளமாய் மின்னும் நகைகளுக்கு நடுவில் கட்டழகியாய் வீற்றிருந்தாள். நீண்ட சடைப்பின்னல், அதில் மணம் வீசும் மல்லிகைச் சரம். இருட்டறையில் ஏற்றியிருந்த தொங்கும் விளக்குகளின் சுடர் விட்டு எரியும் வெளிச்சத்தில் அவளது முகம் பிரகாசமாய் ஜொலித்தது.

அழகே உருவெடுத்து வந்த இவளைக் கூட காணாமல் அப்படி என்னதான் தேடுகிறாளோ வித்யா. அம்மனின் அலங்காரத்திலும் லயித்துப் போகாத அவளத் மனம் கோயில் வாசற்படியே நோட்டமிட்டுருந்தது.

தட்டோடு வந்த அர்ச்சகர் "பெயரைச் சொல்லுங்கோ" என்றார்.

வித்யா அர்ச்சகரை ஒரு பார்வையிட்டு மீண்டும் வாசற்படியில் கண்களை உருட்டினாள். அர்ச்சகருக்கு எல்லாம் புரிந்துப் போனது.

"பேஸ் பேஸ்... நடத்துங்கோ..." என்றபடி அடுத்த பக்தரைக் கவனிக்கலானார்.

திடீரேன ஞாபகம் வந்தவளாய் ஒரு தட்டில் மஞ்சள் அரிசியை நிரப்பி, எலுமிச்சை பழத்தோலில் மஞ்சள் குங்குமமிட்டு திரியிட்டு நெய் ஊற்றினாள். பூசைக்குரிய பொருளைத் தயார்ப்படுத்துவதில் கைகளில்தான் மும்முரம் காட்டினாலே தவிர கண்கள் வாசலில் எதையோ தேடிக் கொண்டிருந்தன.

பூக்களைக் கொண்டு எலுமிச்சைத் தட்டினை அலங்கரித்து 'ஓம் தும் துர்காயை நம' எனக் கூறிக் கொண்டே ஒன்பது விளக்குகளையும் ஏற்றினாள்.

மீண்டும் அரச்சகர். தட்டில் இரசீதை வைத்தவள்,

"மாதவன், ரோகினி நட்சத்திரம் ரிசிப ராசி...."
பின்புறத்திலுள்ள வந்த அந்த குரலைக் கேட்டவுடன் அவளது கண்களில் நீர் வழிந்தோடியது. கண்களை இறுகிமூடி நின்றவளின் முன் துர்க்கையம்மன் அழகாய்க் காட்சியளித்தாள்.


ஆக்கம்
எஸ் காந்தி முருகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

சிறுகதை : சதுரங்கம்