குறுங்கதை : தாய்மை

Iநடுமுதுகுத் தண்டில் போடப்பட்டிருந்த ஊசி உயிரைக் கொன்றுக் கொண்டிருந்தது. முதுகைச் சாய்த்துப்படுத்திருக்கையில் அதன் வழி இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது. கால்களை நகர்த்த முடியாத அளவிற்கு மருத்துப் போய்க் கொண்டிருந்தன.சில நிமிடங்களிலே இடுப்புக்குக் கீழே எல்லா உணர்வுகளும் தன் நிலை மறந்தன.

"தானா புள்ளய பெத்துக்க வக்கில்ல. ஓபரேசனா இவளுக்கு... அந்த காலத்துல நாங்கலாம் குனிஞ்சி நிமிந்து வீட்ட பெருக்கி கழுவி கிணத்துல தண்ணிந இரச்சி ரெண்டு மூனு டீசி துணிய தோச்சி காய போட்டு சமச்சு வெச்சு பஸ்ச புடிச்சி போயி புள்ளயப் பெத்துக்கிட்டு வந்தோம். இவளுங்க என்னான்னா தொட்டதுக்கெலாம் ஓபரேசன்... "

தினம் தினம் இவ்வார்த்தைகளால் மனம் நொந்து நூலானதை விட என் தாய்மைக்குப் பங்கம் வந்து விடுவோமோ என்கிற பயம்தான் இன்னமும் என் மனத்தை நிலைக்குத்திக் கொண்டிருந்தது.

நீரிழிவு நோயின் தாக்கம் கருத்தரித்த முப்பத்தொன்பதாவது வாரத்தின் முதல் நாளிலேயே கத்தி முனைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன்.நாவிற்கு மட்டுமே ருசிப் பார்த்த மனித இனத்தின் செயலால் என் சிசு இவ்வுலகத்தைக் காண இந்நிலை.

என் சிசு பிறக்கும் மறுகணமே என்னுள் உதித்த உயிரைத் தொட்டுப் பார்த்து மார்போடு அணைத்துக் கொண்டு தாய்மையை உணர முடியாத கொடுமை. சிசுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்படக் கூடிய வாய்ப்பு 99சதவிகிதம் உறுதியாகப்படுவதால் உஉடனுக்குனே குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் என மகப்பேறு மருத்துவர் கூறிய நாளிலிருந்து நிம்மதியான தூக்கத்தை அனுபவித்ததில்லை.

பரபரப்பாக காணப்பட்ட அந்த அறையில் அமைதி நிலவியதும் மகப்பேறு பிரிவின் தலைமை மருத்துவர் திரு அறிவழகனின் வருகை என புரிந்தது. எனக்கு மூச்சுக் கவச குழாய் பொறுத்தப்பட்டது.

முதல் கத்தி என் அடிவயிற்றை பிளப்பதை உணர முடிந்தது.மருத்தது என்னவோ என் கால்கள்தான்,தாய்மையென்னும் உணர்வல்ல.

வலியின் உச்சத்தைத் தொடும் முன்னரே ஒரு சிசுவின் அழுகுரல் என் காதில் விழுந்தது. அச்சிசுவைத் தேடியது என் விழிகள், வலி போன இடம் தெரியாமல்.

இரத்தக் கறையுடன் செக்கச் செவந்த மேனியுடன் ஒரு பெண் சிசு என் கண் முன் கொண்டு வரப்பட்டது.தொட்டுப் பார்க்க கைகள் துடித்தன,அவை கட்டுக்குள் இருப்பதை மறந்து.எனக்குள் பூத்த இன்னோரு உயிர் ஓரிரு வினாடிகள்தான் சிசு கண்ணைவிட்டு மறைந்துப் போனது. அந்த அழுகுரல் அறையை விட்டு விலகிப் போனது.

என் கண்களின் ஓரம் வழிந்த நீரை தாதியர் துடைத்தப்போது மௌனமாய்ச் சிரித்தேன்.



ஆக்கம்
காந்தி முருகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

சிறுகதை : சதுரங்கம்